கடலாடியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைக்க கோரிக்கை
சாயல்குடி, மே 30: முதுகுளத்தூர் பகுதியிலிருந்து கடலாடிக்கு காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாய் செல்கிறது. இதில் கடலாடி யூனியன் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் சாலையோரத்தில் காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு போதிய அளவில் தண்ணீர் போய் சேருவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை சாயல்குடி, தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலையாகும். இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் குழாயில் சேதம் பெரிதாகி போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள காவிரி குடிநீர் குழாயை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement