கோயில் நிலத்திலுள்ள மாநகராட்சி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வழக்கு
மதுரை, ஜூலை 9: ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் முன்பு ஸ்ரீ ரங்கம் நகராட்சிக்கு சொந்தமானது என கூறப்பட்ட நிலையில், 2023ம் ஆண்டு ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்டிடத்தை கட்ட மாநகராட்சி தரப்பில், கோயில் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை.
எனவே, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கட்டிடத்தை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், மனுவிற்கு திருச்சி மாநகராட்சியின் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.