நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு,ஜூலை 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான வயது வரம்பு 2025ம் ஆண்டு 30-4-2025ன் படி 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000மாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. இதற்கான விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி வரை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ஈரோடு மாவட்ட இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.