வத்தலக்குண்டுவில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்
Advertisement
வத்தலக்குண்டு, ஜூலை 11: வத்தலகுண்டுவில் இருந்து நடகோட்டைக்கும், தெப்பத்துப்பட்டிக்கும் 2 புதிய வழித்தடங்களில் 2 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் விடப்பட்டுள்ளன. அந்த பஸ்களை வரவேற்கும் நிகழ்ச்சி வத்தலக்குண்டு அருகே விருவீட்டில் நடந்தது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமை வகித்து, பேருந்துகளுக்கு மலர் தூவி வரவேற்றார். பின்னர் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராமசாமி, அன்பழகன், தேவராஜ், பொன்னம்பலம், சந்திரன், சுப்பிரமணி, நிர்வாகிகள் விஸ்வநாதன், கனி, சத்ரியன், சசிகுமார், பார்த்திபன், முருகேசன், பால்பாண்டி, அருண், பிச்சமணி, அருள் முருகன், பொன்ராம், ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement