சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம்
Advertisement
சிங்கம்புணரி, ஜூலை 25: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் பெரிய பாலம் கொக்கன் கருப்பர் கோயிலில் ஆடி களரித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சின்ன மாடு, பெரிய மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. சின்ன மாடுகள் பிரிவில் 16 வண்டிகளும் பெரிய மாடுகள் பிரிவில் 9 வண்டிகளும் கலந்து கொண்டன. காளாப்பூரில் இருந்து மருதிபட்டி வரை பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீரிப்பாய்ந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Advertisement