நாமக்கல்லில் புத்தக விழா
நாமக்கல், ஏப்.25: உலக புத்தக தினத்தையொட்டி, நாமக்கல் போட்டி தேர்வு நூலகத்தில் புத்தக விழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அமுல்ராஜ் வரவேற்றார். தமிழாசிரியர் செந்தில்குமார், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி பேசினார். அதைத் தொடர்ந்து, போட்டி தேர்வு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். விழாவில் கவிஞர் சிந்தனை பேரவை அன்புச் செல்வன், மைய நூலக புரவலர் முகமதுரபி மற்றும் நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி தேர்வு நூலகர் ஜோதிமணி நன்றி கூறினார்.
Advertisement
Advertisement