கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
கோவை, ஏப். 26: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை கவர்னர் நடத்தி வருகிறார்.
Advertisement
இது சட்டமீறல் நடவடிக்கை. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என வலியுறுத்தினர். மேலும், இதற்கு துணைபோகும் வகையில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மாநாட்டில் கலந்து கொண்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Advertisement