பணகுடி அருகே பைக் திருடியவர் கைது
நெல்லை, ஜூலை 8: பணகுடி அருகே விவசாயி பைக்கை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பணகுடி அருகேயுள்ள பழவூர் மாடன்பிள்ளைதர்மம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜபாண்டியன் (59). இவர் கடந்த 5ம் தேதி மதியம் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது பைக் திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராஜபாண்டியன் புகார் அளித்தார்.
Advertisement
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கோமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் ராஜபாண்டியனின் பைக்கை திருடி சென்றவர் கீழ் உவரி வடக்கு தெருவை சேர்ந்த பிரவீன் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
Advertisement