பனியன் நிறுவன அதிபர் தற்கொலை
அவிநாசி, ஜூலை 2: அவிநாசி அருகே பெருமாநல்லூர் தட்டான்குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் மதிநிறைச்செல்வன் (43). பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி பானுமதி, 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக மதிநிறைச்செல்வன் பிரிந்து வசித்து வந்தார். இதற்கிடையே சர்மிளா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மதிநிறைச்செல்வனுக்கு மதுப்பழக்கம் இருந்தது.
Advertisement
இந்த நிலையில் மதுபோதையில் இருந்தவர் நேற்று வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement