உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
தஞ்சாவூர், ஜூலை 10: உலக தோல் நல தினம் மற்றும், உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உலக தோல் நல தினம் மற்றும், உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மரு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மருத்துவக கண்காணிப்பாளர் ராமசாமி, துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் மரு.
முகமது இத்ரிஸ் மற்றும் மரு முத்துமகேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதை தொடர்ந்து செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கும், நோயாளிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு உரை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி தோல் மருத்துவ துறையியின் பொறுப்பு துறை தலைவர் மரு.மோகனசுந்தரி ஏற்று நிகழ்த்தப்பட்டது. மேலும் இவ்விழாவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தோல் மருத்துவ துறையின் உதவி பேராசிரியர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.