அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு
Advertisement
கம்பம் ஜூலை 14: கம்பத்தில் வேளாண்மை குறித்து அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காந்தி கிராம பல்கலைக் கழக வேளாண் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேளாண்மை குறித்து புத்தக வாசிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் காந்தி கிராம பல்கலைக் கழக வேளாண் மாணவர்கள் மனோ,ஹரிஹரன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வேளாண்மை என்னும் வாழ்வியல், உணவே மருந்து, புத்தக வாசிப்பு, கல்வியின் நோக்கம், நேர மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement