கொல்லங்கோட்டில் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி
நித்திரவிளை, ஜூன் 4: கொல்லங்கோடு காவல் நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து உடைத்துள்ளனர். இது தொடர்பான தகவல் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று உள்ளது. இதையடுத்து சம்பந்தபட்ட வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஏடிஎம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருந்தது தெரிய வந்தது. அதேவேளையில் பணம் எதுவும் திருட்டு போகவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஊழியர்கள் ஏடிஎம் மையத்திற்குள் ஆட்கள் போகாதவாறு ஷட்டரை பூட்டி வைத்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லங்கோடு காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement