பணம் நகை வாங்கி தாக்குதல்; மூதாட்டி கதறல்
போத்தனூர் பகுதியைச் சேர்ந்த லூர்து மேரி (76 ) என்பவர் அளித்த மனுவில், ‘‘நான் 4 ஆண்டுகளுக்கு முன் உறவினரிடம் சௌரி பாளையத்தில் வைத்து ரூ.2 லட்சம் மற்றும் 5 பவுன் நகை கொடுத்தேன். ஆனால் இதுவரை பணம் நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இதை திருப்பி கேட்ட போது என்னை தாக்கினர். மிரட்டல் விடுத்தனர். இதனால் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தேன். மனு ரசீது போடப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மூதாட்டி மீது தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் கலெக்டரிடம் அளித்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் மூதாட்டியிடம் உறுதி கூறினார்.