புதுக்கோட்டையில் முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு உதவி தொகை
Advertisement
புதுக்கோட்டை,பிப்.4: தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொண்ட மற்றும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெற 1.1.2023 முதல் 31.12.2024 வரை நடைபெற்ற தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.1.2025 என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் 28.2.2025 என நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.
Advertisement