மயிலாடுதுறையில் கலைஞர் பிறந்தநாள், அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 1: மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம், சோழம்பேட்டை கடைவீதியில் மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மருது, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பழகன் இளைஞர் அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.