பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டும்
அரியலூர், அக்.31: பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பாவிடம், அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் அறிவானந்தம், செயலர் நாகமுத்து, பொருளாளர் கார்த்திக், சாசன தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வழக்குரைஞர் மற்றும் மருத்துவர்களுக்கு உள்ளது போல, பொறியாளர்களுக்கும் தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம ஊராட்சி இவற்றில் தனித்தனியாக உள்ள பொறியாளர் பதிவு முறையை நீக்கி மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையை கொண்டு வர வேண்டும்.
சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது பொறியாளர்களுக்கு ஓடிபி வசதி வர செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர்கள் அழகு தாசன், செந்தில்குமார். அன்பழகன், இணை பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
