பொன்பரப்பி அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ஜெயங்கொண்டம் செப்.27: பொன்பரப்பி அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் மாணவர்கள் பொன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் ரோஸ் தலைமை வகித்தார்.
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மாவட்ட தொடர்பு அலுவலர் செல்லபாண்டியன், தலைமை ஆசிரியை தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பஞ்சபகேசன் வரவேற்றார். தலைமை ஆசிரியரும் மாவட்ட தொடர்பு அலுவலரும் மாணவர்களுக்கு ஆலோசனையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .
செந்துறை தனியார் மருத்துவமனை மருத்துவர் தினேஷ், ராஜேந்திரன் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். சிறப்பு முகாமில் பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் முருகானந்தம் , அனைத்து இருபால் ஆசிரியர் பெருமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.