தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தா.பழூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தா.பழூர், நவ. 21: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் செப்பனிடுதல், தேவைப்படும் இடங்களில் மழை நீர் தேங்காத வகையில் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சாலை பணியாளர்கள் சாலையோரத்தில் உள்ள கருவேல முட்புதர்களை அகற்றும் பணியும் நடைபெறுகிறது. அதுபோல், சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் முறிந்து விழும் அபாயம் உள்ள மரங்களை கண்டறிந்து அவற்றை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர். ஜெயங்கொண்டம் முதல் மதனத்தூர் வரை உள்ள சாலையிலும், அன்னங்காரம்பேட்டை முதல் விளாங்குடி வரை உள்ள சாலையிலும் இந்த பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம், மழைக் காலங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படாமல் பயணங்கள் நடைபெறவும் பாதசாரிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை பணிகளை சாலை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி அருகே உள்ள காக்கப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் இரு பகுதியிலும் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் சாலை ஆய்வாளர் சசிக்குமார் தலைமையிலான சாலை பணியாளர்கள் மண் வெட்டி கொண்டு தேங்கிய நீரை வெளியேற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement