ஒக்கநத்தம் கிராமத்தில் நாய்கள் கடித்து 6 வெள்ளாடுகள் பலி
ஜெயங்கொண்டம், செப்.19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(40)விவசாயி. இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். பின்னர் விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியது.
Advertisement
இதில் படுகாயமடைந்த 6 வெள்ளாடுகள் இறந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் கண்ணனுக்கு வெள்ளாடுகள் இறந்து கிடந்ததை தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கண்ணன் கால்நடை மருத்துவர் வீரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் வீரேந்திரன் மருத்துவ குழுவினர் இறந்த வெள்ளாடுகளை உடல்கூறு ஆய்வு செய்த பின் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.
Advertisement