ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
ஜெயங்கொண்டம், செப்.18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ”தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மை கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பார்வை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வடிவேலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ராசமூர்த்தி தலைமை வகித்து பேசினார்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பணிநிறைவுபெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிற்றரசு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு காவல்துறைத் தலைவராக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பிரபாகரன், ‘‘தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மை கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பார்வை” பற்றி கருத்துரையாற்றினார். தமிழர்களின் அக்கால கலை, கலாச்சாரம், நாகரீகம் மற்றும் பண்பாடு பற்றிய தொன்மைகளை விளக்கிக் கூறினார்.
இறுதியில், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பவானி நன்றி கூறினார். இந்நிகழ்வை, தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்துத் துறைத்தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.