பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை
அரியலூர், ஆக. 18: பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தேவமணி, மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலர் துரைசாமி, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாத்து, தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.