அரியலூரில் வரும் 24ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்கள் பங்குபெற அழைப்பு
அரியலூர், அக்.17: அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 24.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அரியலூர், காத்தான்குடிக்காடு, அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான 8 பாஸ், 10, 12ம்வகுப்பு, ஐடி, டிப்ளமோ, எனி டிகிரி, அக்ரி, ஆஸ்பிடல், மேனேஜ் மென்ட், நர்சிங் படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்; மற்றும் https://www.tnprivatejobs.tn.gov.in , என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.