இடங்கண்ணி கிராமத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தா.பழூர், ஆக. 11; அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி மேலத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ தரன் என்பவர் வீட்டில் பாத்ரூமுக்கு குழாய் அமைக்கும் வேலை பார்த்தள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கட்டிங் மிஷன் மூலம் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது விக்னேஷ் மயங்கிய நிலையில் தரையில் கிடந்துள்ளார். பின்னர் மின்சாரத்தை துண்டித்து அவரை அருகில் உள்ள தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement