லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்னம், அக். 8: லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் பெரம்பலூர், அரியலூர் செல்லும் சாலை பெரும்பகுதி ஆக்கிரமிப்புகள் இருந்தன. மேலும் இந்த ஆக்கிரமிப்புகளால் சாலையில் பேருந்து போக்குவரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வந்தது. குறிப்பாக காலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பேருந்துகள் செல்வதற்கு ஆக்கிரமிப்பு இருந்ததால் மிகவும் தொந்தரவாக இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து குன்னம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் ராஜ்மோகன், சாலை ஆய்வாளர் நீலமேகம் மற்றும் சாலை பணியாளர்கள், மங்களமேடு காவல் ஆய்வாளர் கமலஹாசன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்போடு, லப்பைக்குடிக்காடு மாட்டு பாலத்தில் இருந்து வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் மிகவும் ஒத்துழைப்பு அளித்ததாக பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.