கடகூர் ஊராட்சியில் ரூ.10.32 லட்சத்தில் பாலம், சாலை அமைக்கும் பணி
அரியலூர், அக். 8: அரியலூர் ஒன்றியம், கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025-2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல் பணி, ரூ.5.32 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் பணி ஆகிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
Advertisement
இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளவரசன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் சங்கர், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement