தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விளை பொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்: ஜெயங்கொண்டம், திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஜெயங்கொண்டம், ஆக.7: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து 8 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களான எள் மற்றும் கடலையை விற்பனை செய்வதற்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்த விவசாயிகள் வியாபாரிகள் இல்லாததால் எடுத்து வந்த

விளை பொருட்களை அங்கே அடுக்கி வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

மீண்டும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகளை அதிகாரிகள் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாங்கள் கொண்டு வந்த விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு யாரும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஜெயங்கொண்டம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி சமூக முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து அதிகாரிகளிடமும், ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களிடமும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்ய, முன்பு இருந்த நடைமுறை போல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

Related News