அரசு இடத்தை தனி நபர் சொந்தம் கொண்டாடும் அவலநிலை பொதுமக்கள், ஆர்டிஓவிடம் புகார்
ஜெயங்கொண்டம், ஆக. 6: உடையார்பாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை போட்ட அரசு இடத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடுவது குறித்து பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ராஜவீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் பூமி பூஜை போட்டார்.
இதையடுத்து அங்கன்வாடி கட்டிடம் கட்ட பணிகள் தொடங்க உள்ள நிலையில் பூமி பூஜை போடப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் தனது பெயரில் பட்டா இருப்பதாக கூறி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் புகையிலை தெருவில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து தனது பெயரில் பட்டா இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் மனுவை கொடுத்து கலைந்து சென்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தை தனக்கு சொந்தமானது என தனி நபர்கள் கூறி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் பற்றிய தகவல்கள், கல்வி மற்றும் தொடர்பு நூல் வெளியிடப்பட்டது.