அரியலூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூர், நவ.5:அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 29 ஆண்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற நவம்பர் மாதம் 10,11, மற்றும் 12ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.(அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கலந்து கொண்டு ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
ஆண்கள் மட்டும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். நேர்முகத் தேர்வின் போது நவ.1 ம் தேதியன்று 20 வயது நிறைவடைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஒன்று எடுத்து வர வேண்டும்.ச மீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும். இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. ஆண்களுக்கு உயரம் BC மற்றும் MBC பிரிவினருக்கு 170cm, SC மற்றும் ST பிரிவினருக்கு 167cm, மார்பளவு அனைவருக்கும் சாதாரணமாக 81cm விரிந்த நிலையில் 86cm, இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய ஊக்கத்தொகை மட்டும் பெற்று தரப்படும். பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஊர்க்காவல் படைக்கு 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். தேர்வு நாள் அன்று எவ்வித பயணப் படியும் வழங்கப்படமாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.