தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் சீராய்வு பயிற்சி
தா.பழூர், நவ.5:தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பற்றிய பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு (SIR) பற்றிய பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தா.பழூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் ஒன்றிய கழக செயலாளர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் ஒன்றிய கழக மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,அரியலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வளவனூர் அன்பரசன் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு (SIR) பற்றிய ஆலோசனைகள் வழங்கினார். இந்த தீவிர வாக்காளர் சீராய்வு பயிற்சி கூட்டத்தில் அவைத்தலைவர் சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், கார்த்திகைகுமரன், சம்பந்தம், தங்கபிரகாசம், முனைவர் முருகானந்தம், நளராசன், மருத்துவர் சங்கர், எழிலரசி அர்ச்சுனன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA - 2), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA),கிளை கழக செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.