பொன்பரப்பி அரசு பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு
அரியலூர், அக்.4: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்குடிகாடு கிராமத்தில், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முகாம் அமைத்து பல்வேறு சமூக பணிகளை செய்து வந்தனர். 7 நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட முகாமில், மாணவர்கள் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தை தூய்மைப் படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொண்டனர்.
Advertisement
மேலும் சுற்றுச்சூழல், சுகாதாரம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இம்முகாமின் நிறைவுநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் முருகானந்தம், தலைமை ஆசிரியை தனம், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பஞ்சாபகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் உதவி அலுவலர் வேல்முருகன் செய்திருந்தார்.
Advertisement