அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தி படத்திற்கு மரியாதை
அரியலூர், நவ.1: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலுள்ள இந்திராகாந்தி உருவப் படத்துக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வடக்கு வட்டார தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் செந்தில்குமார், நகர பொறுப்பாளர்கள் ரகுபதி, அப்பாதுரை, அருள் உள்ளிட்டோர் இந்திரா காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Advertisement
Advertisement