உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் பெண்களுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம், நவ.1: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான குற்றம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி உடையார்பாளையம் காவல்நிலையம் சார்பில் பள்ளியில் போதைப்பொருள், பெண்களுக்கான குற்றசெயல் நடந்தால் மாணவிகள் தகவல் கொடுக்க விழிப்புணர்வு போஸ்டரை பள்ளி வளாகத்தில் ஒட்டிய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மாணவிகள் எந்த குற்றச் செயலாக இருந்தாலும் போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். அதற்கு காவல்துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
காவலர் ஆரோக்கியராஜ் பேசுகையில்; பள்ளிக்கு சென்று வரும்போது மாணவிகளாகிய உங்களுக்கு ஏதேனும். இடையூறு ஏற்பட்டால் போஸ்டரில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் நாங்கள் உங்கள் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்றார். நிகழ்வில் பாவைசங்கர் காமராஜ், ராஜசேகரன், தமிழாசிரியர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் அனுஷியா, ஆசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டனர்.