நாளை கலெக்டர் தலைமையில் அரியலூர் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்
அரியலூர், நவ.27: வரும் 28ம் தேதி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வெரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாய அமைப்பினர், சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து ஆலோசனை நடத்துவர்.
Advertisement
இதனடையே நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம்சார்ந்த குறைகளை தொரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தொரிவித்துள்ளார்.
Advertisement