இணைய வழி கல்வி வானொலி மாணவர்களுக்கு பாராட்டு
பரமக்குடி, ஜூலை 24: பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கவிதா. இவர், பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இணைய வழி கல்வி வானொலி நிகழ்ச்சியின் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக குரல் பதிவு எனும் எளிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தி வருகிறார்.
மேலும், இணைய வழி கல்வி வானொலியில் இப்பள்ளியின் மாணவர்கள் காமராஜர் பற்றிய குரல் பதிவுகளை பதிவு செய்தனர். அந்த குரல் பதிவுகளை பதிவு செய்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன இணைய வழி கல்வி வானொலி நடத்திய கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பாராட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது.
இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா மற்றும் குரல் பதிவு செய்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி, ஆசிரியைகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.