கிருஷ்ணராயபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநிநேயம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 10:கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான படிவங்கள் மற்றும் நோட்டீஸ்களை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் செல்வராணி, சண்முகம் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினர்.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஜூலை 8ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 13ம் தேதி வரை பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக விண்ணப்பங்கள் கொடுக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்ட பிறகு 13 துறைகள் மூலம் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெற பெற்று அதற்கான தீர்வு உடனடியாக எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற ஜூலை 16 ம் தேதி கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை முகாமில் கொடுத்து பயன் பெறுமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.