விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா
மதுரை, ஜூலை 3: வைகை நதியின் குறுக்கே கடந்த 1975ல் கலைஞர் முதல்வராக இருந்த போது ரூ.18.77 லட்சம் மதிப்பில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 84 கண்மாய்களை நிரப்பி, 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக விரகனூர் மதகணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டபோதே விநாயகர் கோயிலும் உருவாக்கப்பட்டது. கோயில் கட்டப்பட்டது முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகமும், ஆண்டுதோறும் வருடாபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 48ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, கோபூஜை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 3,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.