தா.பழூரில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தா.பழூர், ஜூலை. 10; அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அரியலூர் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டி 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்.
விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது ஒப்பந்த தினக்கூலி வெளிச்சந்தை முறை பணியாளர் போன்ற பெயர்களில் அடக்கம் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் கோவிந்தன், மாநில குழு உறுப்பினர் சுந்தர விநாயகம், மாநில செயலாளர் குணாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக வேல்ராஜ் நன்றி கூறினார்.