குளச்சலில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்
குளச்சல்,ஜூன் 30: குளச்சல் நகராட்சி பகுதியில் 81 மற்றும் 82-ம் வாக்குச்சாவடி அ.தி.மு.க. முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடைப்பெற்றது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா முன்னிலை வகித்தார்.
2 வாக்குச்சாவடிகளிலும் தலா 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், நகர முன்னாள் செயலாளர் அருள்தாஸ், ஜெ. பேரவை செயலாளர் ஜெகன்,முன்னாள் கவுன்சிலர்கள் சிலுவை மேரி, சூசை மரியான், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச்செயலாளர் துபாய் மாகீன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வினோத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.