எட்டயபுரம் பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்கஅதிமுக வலியுறுத்தல்
எட்டயபுரம், ஜூன் 13: எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் தலைமையில் வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன்பிரபு மற்றும் அதிமுகவினர், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் வாறுகால் கட்டும் பணி அரைகுறையாக விடப்பட்டு உள்ளது. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வாறுகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் குடிநீர் அனைத்து தெருக்களுக்கும் பாரபட்சம் இன்றி வாரம் இருமுறை சீராக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.