தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவைப்புதூரில் காப்பகத்தில் குழந்தைகளுடன் நடனமாடிய நடிகை

 

Advertisement

மதுக்கரை, ஜூலை 10: கோவைபுதூரில் “சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு\” காப்பகம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் ‘‘வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் செய்தார்.

கலை நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுடன் திவ்யா துரைசாமி சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது, குழந்தைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து நடிகை திவ்யா துரைசாமி பேசுகையில், ‘பெண் குழந்தைகளுடன் நடனமாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விஷயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக கூட இருக்கலாம். எனவே, நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.

தொடர்ந்து, ‘சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு’ காப்பகத்தை சார்ந்த பாலசுப்ரமணியம் பேசும்போது, ‘‘பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வற்காக இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்த இதுபோன்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். மனிதம் வாழும் உலகில், அனைவரும் அனைவருக்குமான உறவுகள், அனைவரையும் அரவணைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்ற வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News