விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சாதனையாளர் தினம்
திருச்செங்கோடு, ஏப்.17: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தில், சாதனையாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவிற்கு தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, வேலை வாய்ப்பு இயக்குனர் சரவணன், இயக்குனர் பாலகுருநாதன், முதல்வர்கள் விஜயகுமார், சிவபாலன், பேபி சகிலா, சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். தாளாளர் கருணாநிதி வாழ்த்தி பேசினார். விழாவில் 99 நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 1621 மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும், வேலைக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டது. சென்னை மாற்றம் அமைப்பின் இணை நிறுவனர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவி கிருத்திகா வரவேற்றார்.
Advertisement
Advertisement