மாடலிங் ஆசை காட்டி இளம் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் சுருட்டிய வாலிபர் கைது
திருப்பூர், ஜூலை 11: திருப்பூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் பியூட்டிசியனாக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது தோழியிடம் போனில் கணேஷ் எனும் பெயரில் அறிமுகமானவர் தொடர்ந்து மாடலிங் நிகழ்ச்சிக்கு இளம்பெண்களை அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.35 ஆயிரம் கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டுமென கூறி பணத்தை பெற்று ஏமாற்றினார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்டம் நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கவுதம் (33) என்பவரை கைது செய்தனர்.