கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீரென பற்றிய தீ
Advertisement
கறம்பக்குடி, ஜூலை 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. இவருக்கு சொந்தமான தைல மரக்காடு நேற்று தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தைல மரக்காடு முழுவதும் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Advertisement