தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவாரூரில் மாணவ, மாணவியருக்கு தனியாக மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்

 

திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு மாநாடு திருவாரூரில் மாநாட்டு குழுத் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை எம்.பி செல்வராஜ், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, கட்சியின் மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர ஆசாத், முருகானந்தம், நாகராஜன் உட்பட பல கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் நகர செயலாளராக செல்வம், துணை செயலாளராக ராஜா, பாலதண்டாயுதம் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் திருவாரூர் நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக துவங்கிட வேண்டும், கோயில், மடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே பட்டா வழங்கிட வேண்டும்,

சாலையோர வியாபாரிகள் அவர்கள் செய்து வரும் இடத்தில் நிரந்தரமாக தொழில் செய்திட அனுமதி வழங்கிட வேண்டும், திருவாரூர் வழியாக தற்போது சென்று வரும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் சென்று வர வேண்டும் என்பதுடன் வழிதடங்கள் மாற்றும் நடவடிக்கைகளை தென்னக ரயில்வே கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.