தாந்தோணிமலையில் பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார மாதிரி பூங்கா
கரூர், ஜூலை 11: தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே பராமரிப்பின்றி உள்ள சுகாதார மாதிரி பூங்கா வளாகத்தை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கழிப்பறைகளை எவ்வாறு, எந்தெந்த வகைகளில் அமைத்துக் கொள்வது எப்படி, அதன் வகைகள் என்ன என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது. பொதுமக்கள் அந்த சமயத்தில் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர்.
தற்போதைய நிலையில் அந்த பூங்கா வளாகம் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உட்புறம் அமைத்து தரப்பட்டுள்ள மாதிரி சுகாதார வளாகம் அமைத்தும் சிதிலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.