விகேபுரம் மேலக்கொட்டாரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது
விகேபுரம், ஜூன் 19: விகேபுரம் மேல கொட்டாரம் பகுதியில் நேற்று இரவு பாண்டி என்ற கட்டப்பாண்டி வீட்டில் தீ பிடித்து எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விகேபுரம் மேல கொட்டாரத்தில் வசித்து வருபவர் குட்டிசாமி மகன் பாண்டி என்ற கட்டப்பாண்டி (58). கூலித் தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு வெளியே சென்றுவிட்டார். மெழுகுவர்த்தி எரிந்து அருகில் உள்ள ேபப்பரில் தீப்பிடித்து. இதை தொடர்ந்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அம்பை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.