9 கிலோ புகையிலை பறிமுதல்
போடி, ஜூலை 11: போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி போடி அருகே ரெங்கநாதபுரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ரெங்கநாதபுரம் வடக்கு ராஜ தெருவை சேர்ந்த ராமர் மகன் பெருமாள்சாமி (54) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு போடி அருகே கோடங்கிபட்டியை சேர்ந்த அருண் என்பவர் புகையிலை பாக்கெட் பண்டல்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது, போலீசார் வருவதை கண்டு அருண் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தொடர்ந்து பெட்டிகடையை சோதனையிட்ட போது, 9 கிலோ புகையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகையிலையை பறிமுதல் செய்து பெருமாள் சாமியை கைது செய்தனர்.