தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த 9 வேட்பாளர்கள்

காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் க.செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் சார்பில் சந்தோஷ்குமார், பிஎஸ்பி சார்பில் இளையராஜா உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

Advertisement

அதன்படி, காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பணியாக காலை முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் க.செல்வம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக - 5,86,044, அதிமுக - 3,64,571, பாமக - 1,64,921, நாம் தமிழர் - 1,10,27 என்ற வாக்குகள் பெற்றிருந்தனர்.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட க.செல்வம் 2,21,473 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனால், திமுக வேட்பாளர் செல்வம் 2வது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை தவிர பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார், பிஎஸ்பி வேட்பாளர் இளையராஜா உள்ளிட்ட 6 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

Advertisement