மூதாட்டியிடம் 7 பவுன் பறிப்பு
சேலம், ஏப்.17: சேலம் கருப்பூர் மாங்குப்பை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (87). இவர் நேற்று அதிகாலை கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென லட்சுமி அணிந்திருந்த 7பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார். அப்போது எழுந்த லட்சுமி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி கருப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். அதில், கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த விஜயகுமார் தான் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து அந்த விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement