வீட்டிற்குள் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மாயம்
கோவை, ஜூலை 11: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபி (39). தனியார் நிறுவன ஊழியர். இவர், கோவை வெள்ளலூர் இவிபி காலனியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் உரிமையாளருக்கும், கோபியின் குடும்பத்தினருக்கும் வாடகை கொடுப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால், கோபி குடும்பத்தினர் பொள்ளாச்சிக்கு சென்றனர். கோபி மட்டும் அடிக்கடி வாடகை வீட்டிற்கு வந்து சென்றார்.
கடந்த மே மாதம் வந்த அவர், பின்னர் கடந்த 8ம்தேதி வாடகை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடி பார்த்தும் நகை கிடைக்காததால், இதுபற்றி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.